செயற்கை நுண்ணறிவில் (AI) உலகளாவிய ஒத்துழைப்பை மையமாகக் கொண்டு, இந்திய அரசு இந்தியா–AI தாக்க உச்சி மாநாடு 2026 என்பதை நடத்தவுள்ளது.
புதுதில்லியில் நடைபெறும் இந்த உச்சிமாநாடு, உலகளாவியத் தெற்கு நாடுகளில் நடைபெறும் முதல் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாடாகும்.
இந்த உச்சி மாநாடு மக்கள், கிரகம் மற்றும் முன்னேற்றம் ஆகிய மூன்று சூத்திரங்களை அடிப்படையாகக் கொண்டது.
இந்த மாநாட்டில் ஏழு சக்கரங்களை (கருத்துரு) சுற்றி விவாதங்கள் ஏற்பாடு செய்யப் படும், அவையாவன: மனித மூலதனம்; சமூக அதிகாரமளிப்புக்கான உள்ளடக்கம்;பாதுகாப்பான மற்றும் நம்பகமான AI;மீள்தன்மை, புத்தாக்கம் மற்றும் செயல்திறன்;அறிவியல்;AI வளங்களை ஜனநாயகப் படுத்தல்;பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நன்மைக்கான செயற்கை நுண்ணறிவு (AI).
இது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய செயற்கை நுண்ணறிவு (AI) திட்டம், இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்கள் மற்றும் டிஜிட்டல் இந்தியா முன்முயற்சி ஆகியவற்றால் ஆதரிக்கப்படுகிறது.
இந்த உச்சி மாநாடு என்பது பொறுப்பான AI ஏற்பை ஊக்குவித்தல், உலகளாவிய கூட்டாண்மைகளை வலுப்படுத்துதல் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.