மத்திய மனித வள மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகமானது தனது “இந்தியாவில் பயில்வோம்” என்ற திட்டத்தின் கீழ் முதலாவது இந்தியக் கல்வியியல் ஆய்வுத் தேர்வு 2020 (INDSAT - Indian Scholastic Assessment) என்ற தேர்வை நடத்தியுள்ளது.
IND-SAT என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியப் பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கு வேண்டி அயல்நாட்டு மாணவர்களுக்காக உதவித் தொகை மற்றும் சேர்க்கை ஆகியவற்றை வழங்குவதற்காக நடத்தப்படும் ஒரு தேர்வாகும்.
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் “இந்தியாவில் பயில்வோம்” என்ற திட்டத்தின் கீழ், அயல்நாட்டு மாணவர்கள் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளுக்காக இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 116 உயர் கல்வி நிறுவனங்களில் வந்து பயிலுகின்றனர்.