இந்தியாவில் 4 வகையிலான சோதனை முறைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
அவை டெரா-ஹெர்ட்ஸ் அலைகளை அடிப்படையாகக் கொண்ட சுவாசச் சோதனை, குரல் சோதனை, சமவெப்பச் சோதனை மற்றும் பாலி அமினோ அமிலச் சோதனை ஆகியவையாகும்.
மேற்கூறிய இந்த 4 சோதனைகளும் 1 நிமிடத்திற்குள் கோவிட் – 19 வைரசின் இருப்பைக் கண்டறியும் திறன் கொண்டவைகளாகும்.
குரல் சோதனையானது நோயாளியின் குரலில் ஏற்படும் மாற்றம் மற்றும் அவருடைய சுவாசமுறை மோசமடைதல் ஆகியவற்றைக் கண்டறிவதற்காக மனிதக் குரல்களின் பதிவுகளை ஆய்வு செய்கின்றது.
இது டெரா-ஹெர்ட்ஸ் அலைகளைப் பயன்படுத்தி இந்த வைரஸைக் கண்டறிவதற்காக உருவாக்கப் பட்ட முறையின் ஒரு பகுதியாகும்.