சமீபத்தில் ஐக்கிய நாடுகள் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி மாநாட்டு அமைப்பானது (UNCTAD - United Nations Conference on Trade and Development) ஐக்கிய நாடுகள் முதலீட்டு ஊக்குவிப்பு விருது – 2020 என்ற விருதின் வெற்றியாளராக “இன்வெஸ்ட் இந்தியாவை” அறிவித்து உள்ளது.
இந்த விருது வழங்கும் விழாவானது UNCTAD அமைப்பின் தலைமையகமான ஜெனீவாவில் நடைபெற்றது.
ஐக்கிய நாடுகளின் இந்த விருதானது உலகில் உள்ள சிறந்த நடைமுறை முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனங்களின் தலைசிறந்த சாதனைகளை அங்கீகரித்து அனுசரிக்கின்றது.
இன்வெஸ்ட் இந்தியா ஆனது மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் மத்திய தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறையின் கீழ் 2009 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
இது இந்திய முதலீட்டாளர்களுக்கு முதன்மை ஆதரவுத் தளமாகச் செயல்படும் ஒரு தேசிய முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் ஆதரவு நிறுவனமாகும்.