TNPSC Thervupettagam

இமாலய வழித்தட வலையமைப்பு

August 15 , 2022 1075 days 504 0
  • சீனா மற்றும் நேபாளம் ஆகியவை இணைந்துச் சமீபத்தில் “இமாலயப் பல் பரிமாண வழித்தட இணைப்பு வலையமைப்பை” உருவாக்க ஒப்புதல் அளித்தன.
  • இந்த ஒப்பந்தத்தின் கீழ், சீனா-நேபாள எல்லைக்குட்பட்ட இரயில்வேயினை நிறுவச் செய்வதற்கான சாத்தியக் கூறுகளைக் கண்டறிவதற்கான ஒரு ஆய்விற்கு சீனா நிதி அளிக்கும்.
  • சீனாவின் மண்டலம் மற்றும் சாலை முன்னெடுப்பின் கீழ் இமாலயப் பல் பரிமாண வழித்தட இணைப்பு வலையமைப்பானது கட்டமைக்கப்படும்.
  • இதன் கீழ் இரயில்வே மற்றும் தகவல் தொடர்பு வலையமைப்புகள் கட்டமைக்கப் படும்.
  • இது மண்டலம் மற்றும் சாலை முன்னெடுப்பின் கீழ், நேபாளத்திற்கும் சீனாவிற்கும் இடையே கட்டமைக்கப்பட உள்ள ஒரு பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த வழித் தடமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்