இராம் சரண் & பிறர் மற்றும் சுக்ராம் & பிறர் இடையிலான வழக்கு
July 22 , 2025 15 hrs 0 min 26 0
இராம் சரண் & பிறர் மற்றும் சுக்ராம் & பிறர் இடையிலான வழக்கில், பழங்குடியினப் பழக்கவழக்கங்களின் அடிப்படையில் பெண் வாரிசுரிமையை மறுக்கச் செய்யும் ஒரு மேல் முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
பழங்குடியினப் பெண்களுக்கு மூதாதையர் சொத்தில் சம உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாலினத்தின் அடிப்படையில் மட்டுமே பெண் வாரிசுகளை விலக்குவது பாகுபாடு காட்டும் செயல் மற்றும் அது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று நீதிமன்றம் கூறியது.
பழங்குடியினப் பெண்களை வாரிசுரிமையிலிருந்து விலக்குவது அரசியலமைப்பின் 14 மற்றும் 15 வது சரத்துகளை மீறுகிறது.
38 மற்றும் 46வது சரத்துகளுடன் சேர்த்து ஆராய்ந்தால், பெண்களுக்கு எதிராக எந்தப் பாகுபாடும் இல்லை என்பதை உறுதி செய்வதில் அவை அரசியலமைப்பின் கூட்டு நெறிமுறைகளை சுட்டிக்காட்டுகின்றன.
1956 ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டமானது பட்டியலிடப்பட்ட பழங்குடியின மக்களுக்குப் பொருந்தாது என்றாலும், பழங்குடியினப் பெண்களை வாரிசுரிமையில் இருந்து தானாகவே விலக்குவதை அது குறிக்காது.
பெண்களுக்கு வாரிசுரிமையைத் தடுக்கும் வகையில் எந்தவொரு நிரூபிக்கப்பட்ட தடை செய்வதற்கான ஒரு வழக்கமோ அல்லது வகுக்கப்பட்ட ஒரு சட்டமோ இல்லாத நிலையில், "நீதி, சமத்துவம் மற்றும் உறுதியான நீதி" என்ற கொள்கை மேலோங்க வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது.
1875 ஆம் ஆண்டு மத்திய மாகாணச் சட்டத்தை ரத்து செய்வது தொடர்பான தவறான புரிதலையும் இந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்தியது.
இதில் உச்ச நீதிமன்றத்தினால் மேற்கோள் காட்டப்பட்ட பிற தீர்ப்புகள் திருமதி சர்வாங்கோ மற்றும் திருமதி உர்ச்சமாஹின் இடையிலான வழக்கு (2013) மற்றும் திரித் குமார் மற்றும் தாதுராம் இடையிலான வழக்கு (2024) ஆகியனவாகும்.
இது விசாரணை நீதிமன்றம், முதன்மை மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் சத்தீஸ்கர் மாநில உயர் நீதிமன்றத்தினால் ஒரே நேரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை மாற்றுவதாகும்.