GW250114 என்பது இரண்டு கருந்துளைகளின் இணைப்பிலிருந்து வரும் ஈர்ப்பு அலை நிகழ்வாகும்.
ஒவ்வொரு கருந்துளையும் சூரியனின் நிறையில் சுமார் 30 மடங்கு அதிகமாக இருந்தது.
இந்த இணைப்பானது 1.3 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் ஒரு சுழலும் கருந் துளையை உருவாக்கியது.
இந்த சமிக்ஞை இது வரையில் பதிவு செய்யப்பட்டவற்றில் மிகவும் தெளிவான மற்றும் வலிமையான ஈர்ப்பு அலையாகும்.
இந்த நிகழ்வு ஸ்டீபன் ஹாக்கிங்கின் கருந்துளைப் பகுதி தேற்றத்தை உறுதிப்படுத்தி, இணைப்பிற்குப் பிறகு மொத்த கருந்துளை எல்லைப் பகுதி அதிகரித்ததைக் காட்டுகிறது.