உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்களுக்கான நிகழ்நேர பயிற்சித் திட்டம்
August 9 , 2020 1843 days 679 0
இந்திய விளையாட்டு ஆணையமானது “பள்ளி செல்லும் குழந்தைகளின் கேலோ இந்தியா உடற்பயிற்சி ஆய்வு” குறித்த ஒரு நிகழ்நேரப் பயிற்சித் திட்டத்தை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்தப் பயிற்சியானது சிஐஎஸ்சிஇ (Council for The Indian School Certificate Examinations) பள்ளிகளைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு கேலோ இந்தியா கைபேசி செயலியின் மூலம் அளிக்கப்பட உள்ளது.
இந்தப் பயிற்சிக்காக இது இந்தியப் பள்ளி சான்றளிப்புத் தேர்வுகளுக்கான கல்வி வாரிய ஆணையம் மற்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் ஆகியவற்றுடன் இணைந்துள்ளது.