இந்த அறிக்கையானது சர்வதேச ஜனநாயக மற்றும் தேர்தல் உதவிக்கான நிறுவனத்தினால் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
2020 ஆம் ஆண்டில் சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்லும் நாடுகளின் எண்ணிக்கை என்பது ஜனநாயகத்தை நோக்கிச் செல்லும் நாடுகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது.
இந்த அறிக்கையானது ஜனநாயகம், கலப்பு மற்றும் சர்வாதிகார ஆட்சிகள் என்று மூன்று முக்கிய ஆட்சி வகைகளைக் குறிப்பிடுகின்றது.
கலப்பு மற்றும் சர்வாதிகார ஆட்சி ஆகிய இரண்டுமே ஜனநாயகம் சாராதவை என வகைப் படுத்தப்பட்டுள்ளன.
பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் நிலைகளை “பிற்போக்கான நடைமுறைகளை நோக்கி நகரும் மிகவும் கவலையளிக்கும் வகையிலான எடுத்துக் காட்டுகள்” என்று இந்த அறிக்கை குறிப்பிட்டது.
இருப்பினும், இந்தியா 2000 ஆம் ஆண்டு முதல் நடுத்தர அளவிலான செயல்திறன் கொண்ட ஜனநாயகம் என்ற வகைப்பாட்டிலேயே உள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 3 உறுப்பினர் நாடுகள் (ஹங்கேரி, போலந்து மற்றும் ஸ்லோவேனியா) ஆகியனவும் குறிப்பிடத் தக்க அளவில் ஜனநாயக வீழ்ச்சியைக் கண்டுள்ளன.