இந்தியாவின் செல்வந்தர்களான 1% பேர் 2000 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் தங்கள் செல்வத்தை 62% அதிகரித்துள்ளதாக G20 அறிக்கை தெரிவிக்கிறது.
உலகளவில், முன்னணி 1% செல்வந்தர்கள் 2000 முதல் 2024 ஆம் ஆண்டு வரையில் உருவாக்கப் பட்ட அனைத்து புதிய செல்வங்களிலும் 41% வளத்தினைக் கைப்பற்றினர் அதே நேரத்தில் மனிதகுலத்தின் கீழ் நிலையில் உள்ள பாதி பேர் 1% வளத்தினை மட்டுமே பெற்றனர்.
சீனா மற்றும் இந்தியா போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட சில நாடுகள், தனி நபர் வருமானத்தை அதிகரிப்பதன் காரணமாக நாடுகளுக்கு இடையேயான சமத்துவமின்மையைக் குறைத்துள்ளன.
பாதிக்கும் மேற்பட்ட உலக நாடுகளில், 1% செல்வந்தர்கள் தங்கள் செல்வ வளத்தின் பங்கை அதிகரித்து, உலக மக்கள்தொகையில் 74% பேரை உள்ளடக்கியதாக உள்ளனர்.
இந்தியாவில், மேல் நிலையில் உள்ள 1% பேர் தங்கள் செல்வ வளத்தின் பங்கை 62% அதிகரித்தனர், அதே நேரத்தில் சீனாவில் அது 54% வளர்ச்சியடைந்தது.
அதிக சமத்துவமின்மை உள்ள நாடுகள் ஜனநாயக வீழ்ச்சியை எதிர்கொள்ளும் வாய்ப்பு ஏழு மடங்கு அதிகமாகும்.
2020 ஆம் ஆண்டு முதல், உலகளாவிய வறுமைக் குறைப்பு குறைந்துள்ளது அல்லது தலைகீழாக மாறியுள்ளது.
தற்போது, 2.3 பில்லியன் மக்கள் மிதமான அல்லது கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர்.
உலக மக்கள்தொகையில் பாதி பேர் இன்னும் அத்தியாவசிய சுகாதார சேவைகளைப் பெறவில்லை என்பதோடு மேலும் 1.3 பில்லியன் மக்கள் தங்கள் கைப்பிடிப்பிலிருந்து (சேமிப்பினை) செலவழிக்கும் சுகாதாரச் செலவுகளால் வறிய நிலையில் உள்ளனர்.