TNPSC Thervupettagam

உலகளாவிய பருவநிலை புதுப்பிப்பு குறித்த அறிக்கை

June 2 , 2026 11 days 101 0
  • The Global Annual to Decadal Climate Update 2026–2035 என்ற அறிக்கையானது, அடுத்த தசாப்தத்தில் உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் பருவநிலை தீவிரங்கள் அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளது.
  • இந்த அறிக்கையை உலக வானிலை அமைப்பு (WMO) வெளியிட்டுள்ளது.
  • 2026-2030 காலக் கட்டத்தில் உலகளாவிய வெப்பநிலை, தொழில்துறைக்கு முந்தைய அளவை விட 1.3°C முதல் 1.9°C வரை அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
  • 2030 ஆம் ஆண்டிற்கு முன்னதாக, உலகளாவிய வெப்பநிலை தற்காலிகமாக 1.5°C வெப்பமயமாதல் வரம்பை தாண்டுவதற்கு 91% வாய்ப்பு உள்ளது.
  • ஆர்க்டிக் குளிர்காலங்கள் சமீபத்திய வரலாற்றுச் சராசரியை விட 2.8°C அதிகமாக வெப்பமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • உலகளவில் வெப்ப அலைகள் மற்றும் பிற தீவிர வானிலை நிகழ்வுகளின் அபாயம் அதிகரித்துள்ளதை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்