TNPSC Thervupettagam

எத்தனால் எரிபொருள் கட்டமைப்பின் விரிவாக்கம்

June 7 , 2026 7 days 105 0
  • 2026 ஆம் ஆண்டிற்குள் 500 நெகிழ்வு - எரிபொருள் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் 2027 ஆம் ஆண்டிற்குள் 5,000 விற்பனை நிலையங்கள் என எத்தனால் எரிபொருள் உள்கட்டமைப்பை படிப்படியாக விரிவுபடுத்துவதாக இந்தியா அறிவித்து உள்ளது.
  • இந்தியா தனது E20 (20% எத்தனால் கலந்த பெட்ரோல்) இலக்கை நிர்ணயிக்கப்பட்ட 2030 ஆம் ஆண்டிற்கு முன்னதாகவே 2025 ஆம் ஆண்டிலேயே எட்டியுள்ளது.
  • நெகிழ்வு - எரிபொருள் வாகனங்கள், E20 மற்றும் E85 (85% எத்தனால் மற்றும் 15% பெட்ரோல்) உள்ளிட்ட பல்வேறு பெட்ரோல்-எத்தனால் கலவைகளில் இயங்கக் கூடியவை.
  • இத்திட்டத்தின் முதல் கட்டம் டெல்லி-தேசிய தலைநகர் பகுதி (NCR), மும்பை, புனே மற்றும் நாக்பூர் ஆகிய பகுதிகளில் செயல்படுத்தப்படும்.
  • மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (MoRTH) E85, E100 (100% எத்தனால்) மற்றும் B100 (100% உயிரிடீசல்) ஆகிய எரிபொருள்களுக்கான தரநிலைகளை முன்மொழிந்துள்ளது.
  • எத்தனால் கலப்பானது கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும், கரியமில வாயு உமிழ்வைக் குறைக்கவும், உயிரி எரிபொருள் துறைக்கு ஆதரவளிக்கவும் உதவுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்