காசினி விண்கலம் ஆனது சனிக் கோளின் துணைக்கோளான என்செலடஸிலிருந்து வெளியேற்றப்பட்ட புதிய பனித் துகள்களில் புதிய சிக்கலான கரிம மூலக்கூறுகளைக் கண்டறிந்தது.
மேலும், இந்தக் கண்டறியப்பட்ட சேர்மங்களில் அலிபாடிக், சுழற்சி சார் எஸ்டர்கள், ஈதர்கள் மற்றும் சாத்தியமான நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் கொண்ட மூலக்கூறுகள் அடங்கும்.
இந்த மூலக்கூறுகள் ஆனது என்செலடஸின் நிலத்தடி கடலில் இருந்து உருவாகின்றனவே தவிர, சனிக் கோளின் E வளையத்தில் உள்ள நீண்டகாலக் கதிர்வீச்சு வெளிப்பாட்டிலிருந்து அல்ல.
இந்தக் கண்டுபிடிப்புகள் ஆனது, என்செலடஸின் கடலில், செயலில் உள்ள சிக்கலான வேதியியலை உறுதிப்படுத்துவதால், இது ESA (ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்) எதிர்காலத்தில் அந்த துணைக்கோளின் ஓர் ஆய்வுப் பயணத்தினை மேற்கொள்வதற்கான வாய்ப்பினை வலுப்படுத்துகின்றன.