கடல் சார் பல்லுயிர்ப் பெருக்க ஒப்பந்தத்தின் தயாரிப்பு ஆணையம்
September 6 , 2025 15 hrs 0 min 1 0
கடல் சார் பல்லுயிர்ப் பெருக்க ஒப்பந்தத்தின் தயாரிப்பு ஆணையம் ஆனது 2025 ஆம் ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று அதன் இரண்டாவது அமர்வை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நிறைவு செய்தது.
இது UNCLOS (ஐக்கிய நாடுகளின் கடல் சார் சட்டம் குறித்த உடன்படிக்கை) உடன்படிக்கையின் கீழ் BBNJ (தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பல்லுயிர்ப் பெருக்கம்) ஒப்பந்தம் என்று முறையாக அழைக்கப்படுகிறது.
இது 2023 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
இது பொதுவாக உயர் கடல்கள் என்று அழைக்கப்படுகின்ற தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டப் பகுதிகளுக்கு (ABNJ) பொருந்தும்.
இது கடல் சார் பல்லுயிர்ப் பெருக்கத்தின் வளங்காப்பு மற்றும் நிலையான பயன்பாட்டை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தமானது, கடல் சார் மரபணு வளங்கள், கடல் சார் பாதுகாக்கப்பட்டப் பகுதிகள் உட்பட பகுதி சார்ந்த மேலாண்மை கருவிகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
இந்தியா BBNJ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது ஆனால் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான தரவின் படி, அந்த ஒப்பந்தமானது இன்னும் அங்கீகரிக்கப் படவில்லை.