TNPSC Thervupettagam

கழிவறைகள் 2.0 பிரச்சாரம்

November 28 , 2022 900 days 462 0
  • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கழிவறைகள் 2.0 பிரச்சாரத்தைப் பெங்களூரு நகரில் தொடங்கி வைத்தார்.
  • குடிமக்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை ஈடுபடுத்திய வகையிலான கூட்டு நடவடிக்கைகள் மூலம் நகர்ப்புற இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள பொது மற்றும் சமூகக் கழிப்பறைகளின் நிலையை மாற்றுவதை இந்தப் பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தப் பிரச்சாரமானது ஐந்து கருத்துரு சார்ந்த திட்டங்களை உள்ளடக்கியுள்ளது:
    • சமூக மற்றும் பொதுக் கழிப்பறைகளை சுத்தம் செய்து பராமரிப்பதில் கவனம் செலுத்துவதற்கான ‘கழிவறை மேலாண்மைக்கான மக்கள் ஈடுபாடு' (People for Toilets),
    • பொதுக் கழிப்பறைகளைப் பொறுப்பெடுத்து அதைப் பேணுதல் என்ற ஒரு நடவடிக்கையை முக்கிய நோக்கமாகக் கொண்ட ‘கழிவறை மேலாண்மைக்கான பங்குதாரர்கள்’
    • 'கழிவறை வடிவமைப்பு' என்ற கருத்துருவின் கீழ் மேற்கொள்ளப்படும் வடிவமைப்பு சார்ந்த சவால் பிரச்சாரம்
    • பொதுக் கழிப்பறைகளை மேம்படுத்துவதற்காக பயனர்களின் கருத்துகளை ஊக்குவிப்பதற்கான 'கழிப்பறை குறித்த உங்கள் மதிப்பீட்டினை வழங்குங்கள்'
    • ‘எனது எண்ணங்கள் - நமது கழிப்பறைகள்’ - இது கழிவறைகள் குறித்தப் பொது மக்களின் கருத்தைச் சேகரிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்