TNPSC Thervupettagam

கானமயில் பாதுகாப்பு நிலை

July 24 , 2026 4 days 47 0
  • இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) மேற்கொண்ட சமீபத்திய மதிப்பீட்டில், கானமயிலின் (ஆர்டியோடிஸ் நைக்ரிசெப்ஸ்) எண்ணிக்கை சுமார் 110–150 பறவைகள் என்ற அளவில் நிலையாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • IUCN-இன் செந்நிறப் பட்டியலில் மிகவும் அருகி வரும் இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ள கானமயில், தற்போது ராஜஸ்தானின் தார் பாலைவனத்தில் அதன் சாத்தியமான வாழ்விடத்தில் 16% அளவில் மட்டுமே காணப்படுகிறது.
  • இக்கணக்கெடுப்பின் போது சுமார் 130 கானமயில்கள் (±21 மாறுபாடு), 35 கானமயில் கூட்டங்கள், 1,568 சிங்காரா மான்களின் மந்தைகள் மற்றும் 79 பாலைவன நரிகள் பதிவு செய்யப் பட்டன.
  • வாழ்விடப் பிளவு, வேளாண் விரிவாக்கம், வேட்டையாடுதல், முட்டைகளை உண்ணுதல் மற்றும் மின் கடத்துத் தடத்தில் மோதுதல் ஆகியவை இதற்கான முக்கிய அச்சுறுத்தல்களாகும்.
  • கானமயில் பாதுகாப்புத் திட்டம், சாம் மற்றும் ராம்தேவ்ரா மையங்களில் இனப் பெருக்கம் செய்தல், வாழ்விட மேம்பாடு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் வழி காட்டுதலின்படி மின்கடத்துத் தடங்களை நிர்வகித்தல் ஆகியவை இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்