TNPSC Thervupettagam

காற்றுத் தர வாழ்நாள் குறியீடு (AQLI) 2025

September 2 , 2025 4 days 35 0
  • 2023 ஆம் ஆண்டு தரவுகளை அடிப்படையாகக் கொண்ட இந்த அறிக்கையானது, சிகாகோ பல்கலைக்கழகத்தின் எரிசக்தி கொள்கை நிறுவனத்தினால் (EPIC) வெளியிடப் பட்டது.
  • 2023 ஆம் ஆண்டில் டெல்லியின் வருடாந்திர PM2.5 செறிவு 88.4 ஆக இருந்தது அதே நேரத்தில் இந்தியாவின் தேசிய சராசரி 41 ஆக இருந்தது.
  • ஆபத்தான PM2.5 அளவுகள் காரணமாக டெல்லியில் மனிதர்களின் ஆயுட்காலம் 8.2 ஆண்டுகள் குறைக்கப்பட்டுள்ளது.
  • தேசிய அளவில், அதிக PM2.5 அளவுகள் ஆனது மனிதர்களின் சராசரி ஆயுட்காலத்தை 3.5 ஆண்டுகள் குறைக்கின்றன.
  • பீகார், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை முறையே 5.4, 5.3 மற்றும் 5 ஆண்டுகள் என்ற ஆயுட்கால இழப்பைக் காட்டுகின்றன.
  • வட இந்தியாவில் 544.4 மில்லியன் மக்கள் WHO தரநிலைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் 5 ஆண்டுகள் ஆயுட்காலத்தினை ஈட்டலாம்.
  • இந்திய மக்கள்தொகையில் 46% பேர், PM2.5 அளவுகள் தேசியத் தரநிலைகளை விட அதிகமாக உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர்.
  • PM2.5 அளவை தேசியத் தரநிலைகளுக்கு இணையாக குறைப்பது பாதிக்கப்பட்டப் பகுதிகளில் ஆயுட்காலத்தை 1.5 ஆண்டுகள் வரை கூட்டும்.
  • இந்தியாவின் தேசியத் தரநிலையைப் பூர்த்தி செய்ய டெல்லி அதன் மாசுபாட்டை 50 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைக்க வேண்டும் மற்றும் ஆயுட்காலத்தை 4.5 ஆண்டுகள் வரை கூட்ட வேண்டும்.
  • டெல்லியின் மாசுபாட்டில் சுமார் 50% ஆனது உள்ளூர் மூலங்களிலிருந்து ஏற்படுகிறது என்பதோடு தேசியத் தரநிலைகளை பூர்த்தி செய்வதற்கு இதனைக் கட்டுப்படுத்த வேண்டும்.
  • தேசியத் தலைநகர் பகுதி முழுவதும் உள்ள மாசுபாட்டில் 26% குறைப்பது ஆயுட் காலத்தை 1.4 ஆண்டுகள் வரை கூட்டும்.
  • தேசியத் தலைநகர் பகுதியின் மாசுபாட்டில் 44% குறைப்பது ஆயுட்காலத்தை 4.8 ஆண்டுகள் வரை கூட்டும்.
  • கடந்த ஆண்டு அறிக்கையானது, 2022 ஆம் ஆண்டில் இருந்த மாசு அளவுகளின் அடிப்படையில் டெல்லியில் 7.8 ஆண்டுகள் ஆயுட்காலம் குறைவதைக் குறிப்பிட்டுக் காட்டியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்