காவல் துறை உதவியாளர் (ஆர்டர்லி) முறையை ஒழிப்பதற்காக 2026 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்த நடைமுறையை ஒழிப்பதை கண்காணிப்பதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப் பட்டு உள்ளன.
இந்தக் குழுக்களில் மாவட்ட வருவாய் அலுவலர் (DRO), கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (AdSP) மற்றும் பிற மூத்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழுக்கள் புகார்களைச் சேகரித்து, தகவல்களைத் திரட்டி, காவல் துறையினர் மூத்த அதிகாரிகளின் வீட்டு அல்லது தனிப்பட்ட பணிகளுக்குப் பயன்படுத்தப் படவில்லை என்பதை உறுதி செய்யும்.
இதன் அமலாக்கம் குறித்த அறிக்கைகள் ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் உள்துறைச் செயலாளருக்கு அனுப்பப்பட வேண்டும்.
காவல் துறை தலைமை இயக்குநர் (DGP) மற்றும் மாநில அரசு இந்த உத்தரவு பின்பற்றப் படுவதைக் கண்காணிக்கும், மேலும் உத்தரவை மீறும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம்.