TNPSC Thervupettagam

கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதி வாரியங்களின் அதிகார வரம்பு அறிவிப்பு

July 20 , 2021 1477 days 627 0
  • கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதி மேலாண்மை வாரியங்களின் அதிகார வரம்பினை மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் அவை உருவாக்கப்பட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
  • வாரியங்கள் நிறுவப்பட்டதோடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலுள்ள இரு நதிகளின் படுகைகளிலும் அமைக்கப்படும் நீர்மின் ஆற்றல் நிலையம் உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களின் செயல்பாட்டு அதிகாரத்தையும் இந்த வாரியங்களுக்கு மத்திய அரசு மாற்றியுள்ளது.
  • இது 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 14 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
  • இதற்கான அறிவிப்பானது ஜல்சக்தி அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டது.
  • இந்த அறிவிப்பானது கிருஷ்ணா நதிப் படுகையில் அமைந்த 35 நீர்மின் திட்டங்கள் மற்றும் கோதாவரி நதிப் படுகையில் அமைந்த 71 நீர்மின் திட்டங்கள் ஆகியவற்றை இந்த வாரியங்களின் அதிகார வரம்பிற்குள் கொண்டு வந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்