ஹைதராபாத்திலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் “கோவிஹோம்” எனப்படும் விரைவு மின்னணு மற்றும் செயற்கை நுண்ணறிவு முறையினால் இயங்கும் கோவிட்-19 சோதனைக் கருவியை உருவாக்கியுள்ளனர்.
இந்தச் சோதனையை மலிவான விலையில் வீட்டிலேயே செய்ய இயலும்.
இந்தச் சோதனைக் கருவியானது அறிகுறியல்லாத மற்றும் அறிகுறியுடன் கூடிய இரண்டு வகைத் தொற்றினையும் 30 நிமிடங்களுக்குள் கண்டறிந்து விடும்.