TNPSC Thervupettagam

குடிநீர் மணி திட்டம்

July 3 , 2025 10 hrs 0 min 50 0
  • தமிழ்நாடு கல்வி அமைச்சர் பள்ளிகளில் குடிநீர் மணி (Water Bell) திட்டத்தைத் தொடங்கி வைத்து உள்ளார்.
  • இது மாணவர்கள் தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் குடித்து மிக நன்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டு தொடங்கப் பட்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது 2025 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதியன்று செயல்படுத்தப்பட்டது.
  • அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளும் இதைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளன.
  • ஒரு சிறப்புத் தண்ணீர் இடைவேளை மணியானது காலை 11 மணி, பிற்பகல் 1 மணி மற்றும் பிற்பகல் 3 மணிக்கு என ஒரு நாளைக்கு மூன்று முறை ஒலிக்கும்.
  • இந்த மணி ஓசையானது, வழக்கமான பள்ளி இடைவேளை மணிகளிலிருந்து நன்கு வேறுபட்டதாக இருக்கும்.
  • மாணவர்கள் வகுப்பறைகளுக்குள் தண்ணீர் குடிக்க 2-3 நிமிடங்கள் வழங்கப்படும்.
  • தண்ணீர் இடைவேளை நேரத்தில் வெளியே செல்லக் கூடாது.
  • மாணவர்கள் தங்கள் சொந்தத் தண்ணீர் குடுவைகளைக் கொண்டு வர வேண்டும்.
  • கேரள மாநில அரசானது கடந்த ஆண்டு இந்தத் திட்டத்தினைச் செயல்படுத்தியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்