TNPSC Thervupettagam

குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் (விலக்கு) ஆணை, 2025

September 6 , 2025 15 hrs 0 min 7 0
  • மத்திய அரசு ஆனது, 2025 ஆம் ஆண்டு குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் (விலக்கு) ஆணையை அறிவித்தது.
  • இந்த உத்தரவானது, 2025 ஆம் ஆண்டு குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டது.
  • இது முந்தைய நான்கு சட்டங்களுக்கு மாற்றாக அமைந்தது:
    • கடவுச் சீட்டு (இந்தியாவிற்குள் நுழைதல்) சட்டம், 1920,
    • வெளிநாட்டினர் பதிவுச் சட்டம், 1939,
    • வெளிநாட்டினர் சட்டம், 1946, மற்றும்
    • குடியேற்றம் (சரக்குப் போக்குவரத்து நிறுவனங்களின் பொறுப்பு) சட்டம், 2000.
  • இது புதிய சட்டத்தின் 33வது பிரிவின் கீழ் வெளியிடப்பட்டு 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
  • இந்த உத்தரவானது, கடவுச் சீட்டு, பயண ஆவணம் மற்றும் நுழைவு இசைவுச் சீட்டு விதிகளிலிருந்து விலக்குகளை வழங்குகிறது.
  • இதில் பணியில் இருக்கும் இந்திய ஆயுதப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
  • நேபாளம் அல்லது பூடான் எல்லைகள் வழியாக நுழையும் இந்தியக் குடிமக்களுக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது.
  • தங்கள் நாட்டு எல்லைகள் வழியாக நுழையும் நேபாளம் மற்றும் பூடான் குடிமக்களுக்கும் இது பொருந்தும்.
  • பதிவு செய்யப்பட்ட திபெத்திய அகதிகள் மற்றும் ஆப்கானிஸ்தான், வங்காள தேசம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த சில சிறுபான்மைச் சமூகங்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்படுகின்றன.
  • 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னதாக இந்தியாவிற்குள் நுழைந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்த சமயத்தைச் சார்ந்தவர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்துவர்கள் இதில் அடங்குவர்.
  • 2015 ஆம் ஆண்டு ஜனவரி 09 ஆம் தேதி வரை இந்தியாவிற்குள் நுழைந்த பதிவு செய்யப் பட்ட இலங்கைத் தமிழ் நாட்டினரும் இதில் அடங்குவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்