TNPSC Thervupettagam

குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான குழு

July 24 , 2022 1056 days 478 0
  • மத்திய அரசானது “குறைந்தபட்ச ஆதரவு விலை மீதான குழுவை” நிர்ணயித்துள்ளது.
  • குறைந்தபட்ச ஆதரவு விலையினை மேலும் பயனுள்ளதாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் மேம்படுத்துவதை ஒரு நோக்கமாகக் கொண்டு இந்தக் குழுவானது அமைக்கப் பட்டுள்ளது.
  • இக்குழுவின் தலைவராக சஞ்சய் அகர்வால் செயல்படுவார்.
  • "வேளாண் செலவினங்கள் மற்றும் விலைகளுக்கான ஆணையத்திற்கு" அதிக சுயாட்சி அதிகாரங்களை வழங்குவதற்கானப் பரிந்துரைகளை இந்தக் குழு வழங்கும்.
  • இக்குழுவின் மற்ற உறுப்பினர்கள்
    • ரமேஷ் சந்த்- நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர்
    • சுக்பால் சிங் - அகமதாபாத் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் பேராசிரியர்
    • திலிப் சங்கனி - இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு அமைப்பின் தலைவர்
    • உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் செயலாளர்
    • கூட்டுறவு மற்றும் ஜவுளித்துறை செயலாளர்
    • வேளாண் துறை செயலாளர்
    • இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத் துறை செயலாளர்
    • கர்நாடகா, சிக்கிம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநில அரசுகளின் பிரதிநிதிகள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்