மதராசின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குறைந்த விலை, குறைந்தபட்ச ஊடுருவல் கொண்ட தொடர்ச்சியான குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்தச் சாதனம் ஆனது வெளிப்புறக் கண்காணிப்பு தேவையில்லாமல், குளுக்கோஸ் அளவீடுகளை நேரடியாக ஒரு தோல் ஒட்டு சாதனத்தில் காட்டுகிறது.
இது மீண்டும் பயன்படுத்தக் கூடிய மின்னணுவியல், குறைந்த ஆற்றலில் இயங்கும் திரை மற்றும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நுண் ஊசி கொண்ட உணர்வுப் பதிவு ஒட்டு சாதனம் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது.
இந்த அமைப்பின் குறைந்த ஆற்றல் பயன்பாடு வடிவமைப்பு ஆனது, மின் கலத்தின் நீடிப்பினை நன்கு அதிகரிக்கிறது மற்றும் மீண்டும் மீண்டும் மின்னேற்றுவதற்கான தேவையைக் குறைக்கிறது.