சட்டப்பூர்வ அளவியல் (பொதி கட்டப்பட்டப் பொருட்கள்) விதிகள் 2011
July 25 , 2022 1246 days 533 0
நுகர்வோர் விவகாரத் துறையானது, 2022 ஆம் ஆண்டின் சட்டப்பூர்வ அளவியல் (பொதி கட்டப்பட்டப் பொருட்கள்), (இரண்டாவது திருத்தம்) விதிகளை வெளியிட்டுள்ளது.
மின்னணுத் தயாரிப்புகளின் பொதியிலேயே இத்தகையத் தகவல்கள் குறிக்கப் படாமலிருந்தால், ஒரு வருட காலத்திற்கு விரைவுக் குறியீடு மூலம் சில கட்டாய உறுதி ஆவணங்களை வழங்குவதற்கு இந்த விதிகள் வழி வகுத்துள்ளன.
இந்தத் திருத்தமானது, இந்தத் தொழில்துறையினர் விரைவுக் குறியீடு மூலம் விரிவான தகவல்களை எண்ணிம வடிவில் வழங்கிட வழி வகுக்கும்.
முன்னதாக, மின்னணுத் தயாரிப்புகள் உட்பட அனைத்து பொதி கட்டப்பட்ட பொருட்களிலும், 2011 ஆம் ஆண்டு சட்டப்பூர்வ அளவியல் (பொதி கட்டப்பட்ட பொருட்கள்), விதிகளின் படி அனைத்துக் கட்டாய உறுதி ஆவணங்களையும் பொதியிலேயே குறிப்பிட வேண்டும்.