சத்ய பால் மாலிக் 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 05 ஆம் தேதியன்று டெல்லியில் காலமானார்.
2019 ஆம் ஆண்டில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு முன்பு ஜம்மு காஷ்மீரின் கடைசி ஆளுநராக இவர் இருந்தார்.
2021 ஆம் ஆண்டு விவசாயிகள் போராட்டத்தையும், பெண் மல்யுத்த வீரர்களின் போராட்டத்தையும் அவர் ஆதரித்தார்.
1974 ஆம் ஆண்டு சௌத்ரி சரண் சிங் ஆட்சியின் கீழ் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பின்னர் காங்கிரஸ், ஜனதா தளம் மற்றும் பாஜக உள்ளிட்ட பல கட்சிகளில் இணைந்தார்.
பீகார், ஜம்மு காஷ்மீர், கோவா மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் ஆளுநராகப் பணியாற்றினார்.
2013 ஆம் ஆண்டு முசாபர்நகர் கலவரத்திற்குப் பிறகு மேற்கு உத்தரப் பிரதேசத்தில் பாஜக கட்சியில் முக்கியப் பங்கு வகித்தார்.