TNPSC Thervupettagam

சம கருக்கலைப்பு உரிமைகள்

October 7 , 2022 1033 days 574 0
  • நாட்டிலுள்ள அனைத்துப் பெண்களும், அவர்களின் திருமண நிலையைப் பொருட் படுத்தாமல், பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வ கருக்கலைப்புச் சிகிச்சையைப் பெறுவதற்கு அனுமதிக்கும் வகையில், கர்ப்பமாகி 24 வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
  • இது 51 ஆண்டுகள் பழமையான கருக்கலைப்புச் சட்டத்தினை (மருத்துவ முறை சார்ந்த கருக் கலைப்புச் சட்டம், 1971) ரத்து செய்துள்ளது.
  • கருத்தரித்த திருமணமாகாத பெண்கள், 24 வாரங்கள் ஆன கர்ப்பத்தைக் கலைப்பதை இந்தச் சட்டம் தடுக்கிறது.
  • மருத்துவ முறை சார்ந்த கருக்கலைப்புச் சட்டத்தின் சமீபத்தியத் திருத்தமானது 2021 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது.
  • 1960 ஆம் ஆண்டுகள் வரை இந்தியாவில் கருக்கலைப்பு என்பது சட்டவிரோதமானது என்பதோடு இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (IPC) 312வது பிரிவின் கீழ், இந்தக் குற்றத்திற்காக ஒரு பெண்ணுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் / அல்லது அபராதம் விதிக்கப் படலாம்.
  • சாந்தி லால் ஷா குழுவின் அறிக்கையின் அடிப்படையில் 1971 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மருத்துவ முறை சார்ந்த கருக்கலைப்பு மசோதாவானது நிறைவேற்றப் பட்டது.
  • 1971 ஆம் ஆண்டு மருத்துவ முறை சார்ந்த கருக்கலைப்புச் சட்டமானது 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதியன்று அமலுக்கு வந்தது.
  • ஜம்மு & காஷ்மீர் தவிர இந்தியா முழுவதும் இந்தச் சட்டம் பொருந்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்