TNPSC Thervupettagam

சாரஸ் சேகரிப்பு

May 8 , 2020 1931 days 841 0
  • மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சகமானது “அரசு மின்னணுச் சந்தைத் தளம்” (GeM - Government E Marketplace) மீது “சாரஸ் சேகரிப்பு” என்ற ஒரு சேகரிப்பைத் தொடங்கியுள்ளது. 
  • இந்த முன்னெடுப்பானது மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம், GeM, தீன் தயாள் அந்தியோதயா யோஜனா, தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டம் (Day-NRLM - National Rural Livelihood Mission) ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சியாகும்.
  • சாரஸ் சேகரிப்பானது சுய உதவிக் குழுக்களினால் தயாரிக்கப்படும் தினசரிப் பயன்பாட்டுப் பொருட்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • GeM என்பது தேசியப் பொதுக் கொள்முதல் தளமாக அரசாங்கத்தால் நிர்வகிக்கப் படும் ஒரு தளமாகும். இது மத்திய மற்றும் மாநில அரசுகளினால் அதற்குத் தேவைப் படும் சரக்குகள் மற்றும் சேவைகளைக் கொள்முதல் செய்வதற்காகத் தொடங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்