சிஆர்பிஎஃபின் 82வது அமைப்பு தினம் – மத்திய ரிசர்வ்/சேமக் காவல் படை
March 22 , 2021 1635 days 677 0
மத்திய ரிசர்வ் (சேமக்) காவல் படையானது இந்தியாவின் மிகப்பெரிய மத்திய ஆயுதமேந்திய காவல் படையாகும்.
இது இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.
இது 1939 ஆம் ஆண்டு ஜூலை 27, அன்று மன்னரின் பிரதிநிதித்துவம் பெற்ற காவலர் படையாக நடைமுறைக்கு வந்தது.
சுதந்திரத்திற்குப் பிறகு 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 28, அன்று மத்திய ரிசர்வ் காவல்படை சட்டம் இயற்றப்பட்டதன் மூலம் இது மத்திய ரிசர்வ் காவல் படை என்று பெயர் மாற்றம் பெற்றது.
1950 ஆம் ஆண்டில் மார்ச் 19 ஆம் நாளன்று அப்போதைய உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல் மத்திய ரிசர்வ் காவல் படைகளுக்கு குடியரசுத் தலைவரின் வண்ண அடிப்படையிலான விருதுகளை அறிமுகப்படுத்தினார்.
1986 ஆம் ஆண்டில் ஆசியாவிலேயே முதல் மகளிர் படைப்பிரிவினை மத்திய ரிசர்வ் காவல் படை உருவாக்கியது.
இப்படை நக்சலிச தீவிரவாத இயக்கங்களுக்கு எதிரான போராட்டத்தில் பெரும்பங்கு வகிக்கிறது.
மேலும் இது வைஷ்ணவோ தேவி, ராம ஜென்மபூமி மற்றும் அமர்நாத் போன்ற புனித தலங்களின் பாதுகாப்பிற்கும் சேர்த்து சிறப்பாக செயல்பட்டு இருக்கின்றது.