சிறந்த தூய்மையான இடங்கள் (Swachh Iconic Places - SIP) குறித்த 3வது வருடாந்திர மறுஆய்வுக் கூட்டமானது சமீபத்தில் ஜார்க்கண்டில் நடத்தப்பட்டது.
SIP என்பது தூய்மை இந்தியா என்ற திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட மத்தியக் குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை அமைச்சகத்தின் ஒரு முன்முயற்சியாகும்.
இது முக்கியமான இடங்களையும் அவற்றின் சுற்றுப்புறங்களையும் தூய்மையின் உயர் தரத்திற்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் அனைத்துப் பார்வையாளர்களும் பயனடைவதோடு, தூய்மை குறித்த செய்தியையும் பெறுகின்றனர்.
இது நகர்ப்புற வளர்ச்சி, கலாச்சாரம், சுற்றுலா ஆகிய மூன்று மத்திய அமைச்சகங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும் ஒரு கூட்டுத் திட்டமாகும்.