2022 ஆம் ஆண்டிற்கான "மத்திய உள்துறை அமைச்சரின் சிறந்த நடவடிக்கைகளுக்கான பதக்கம்" ஆனது 4 சிறப்பு நடவடிக்கைகளுக்கு வழங்கப் பட்டு உள்ளது.
இந்தப் பதக்கத்தினை வென்றவர்களில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 11 பேர் அடங்குவர்.
இந்தப் பதக்கம் 2018 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
நாடு/மாநிலம்/ஒன்றியப் பிரதேசப் பாதுகாப்பிற்கென அதிக அளவு திட்டமிடல், அதிக முக்கியத்துவம் தரும் நடவடிக்கைகளை அங்கீகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு, எல்லை சார்ந்த நடவடிக்கை, ஆயுதக் கட்டுப்பாடு, போதைப் பொருள் கடத்தலைத் தடுத்தல் மற்றும் மீட்புப் பணிகள் போன்ற துறைகளில் மேற் கொள்ளப் பட்ட சிறப்புச் செயல்பாட்டிற்காக இவ்விருது வழங்கப்படுகிறது.