இது அமெரிக்காவினால் நடத்தப்படும் ஒரு பயிற்சியாகும்.
இந்திய நாடும் நாற்கரப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தை அமைப்பு (அ) குவாட் என்ற அமைப்பினைச் சேர்ந்த தனது சக பங்குதார நாடுகளும் சேர்ந்து கனடா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுடன் இணைந்து சீ டிராகன் 2022 எனப்படும் இந்தப் பன்னாட்டுப் பயிற்சியில் பங்கு கொள்கின்றன.
இது மேற்கு பசிபிக் பகுதியில் உள்ள குவாம் என்னுமிடத்தில் நடைபெறுகிறது.
இந்தப் பயிற்சியில் பங்கு கொள்ளும் 6 நாடுகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகியனவாகும்.