ஒன்றிய அரசின் நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறைதீர்ப்புத் துறை மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் மற்றும் தெலுங்கானா மாநில அரசு ஆகியவை இணைந்து 24வது தேசிய மின்னாளுகை மாநாட்டினை நடத்த உள்ளது.
இந்த மாநாடானது மாதாப்பூரிலுள்ள ஹைதராபாத் சர்வதேச சமூக நல மையத்தில் நடைபெற உள்ளது.
இந்த மாநாடானது “India’s Techade: Digital Governance in a Post Pandemic World” என்ற ஒரு கருத்துருவின் கீழ் நடத்தப்பட உள்ளது.
இது மின்னாளுகை சார்ந்த முன்னெடுப்புகளுக்கு உத்வேகம் அளிக்கும்.
மின் ஆளுகையில் தங்களது வெற்றிகரமான ஈடுபாடுகளை வெளிப்படுத்துவதற்கு தொழில்துறைகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இது வாய்ப்புகளை வழங்குகிறது.