ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் குறைந்த பனிப்பொழிவு மற்றும் வெப்ப அலைகள் காரணமாக சுவிட்சர்லாந்து பனிப்பாறைகள் 2025 ஆம் ஆண்டில் அவற்றின் அளவில் 3 சதவீதப் பனிப்பாறைகளை இழந்தன.
இது 2022, 2023 மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளுக்குப் பிறகு நான்காவது பெரிய வருடாந்திரப் பனிப்பாறை சரிவைக் குறிக்கிறது.
கடந்த பத்தாண்டுகளில், சுவிட்சர்லாந்து அதன் மொத்தப் பனிப்பாறை அளவில் 25 சதவீதத்தினை இழந்துள்ளது.
சுமார் 1,400 பனிப்பாறைகளைக் கொண்ட சுவிட்சர்லாந்து ஆனது, ஏற்கனவே 1,000க்கும் மேற்பட்ட சிறிய பனிப்பாறைகளை இழந்துள்ளது.