தேசியப் பல்லுயிர்ப் பெருக்க ஆணையம் (NBA) ஆனது செம்மரங்கள் (தெரோகார்பஸ் சந்தலினஸ்) வளங்காப்பிற்காக ஆந்திரப் பிரதேச பல்லுயிர்ப் பெருக்க வாரியத்திற்கு 82 லட்சம் ரூபாய் நிதியை அனுமதித்துள்ளது.
இந்த நிதியானது 1 லட்சம் செம்மரக் கன்றுகளை வளர்க்கப் பயன்படுத்தப்படும் என்பதோடு இவை காடுகளுக்கு வெளியே உள்ள மரங்கள் (ToF) வளங்காப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும்.
செம்மரங்கள் தென் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில், குறிப்பாக அனந்தபூர், சித்தூர், கடப்பா மற்றும் கர்னூலில் மட்டுமே காணப்படும் இனமாகும்.
இது CITES உடன்படிக்கையின் இரண்டாம் பின்னிணைப்பின் கீழ் மற்றும் 1972 ஆம் ஆண்டு வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது.