TNPSC Thervupettagam

ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவக (திருத்த) மசோதா, 2018

February 18 , 2019 2359 days 686 0
  • 16வது மக்களவையின் கடைசிக் கூட்டத் தொடரில் ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவக (திருத்த) மசோதா, 2018 ஆனது நிறைவேற்றப்பட்டது.
  • 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ம் தேதி அமிர்தசரஸின் ஜாலியன் வாலாபாக்கில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் நினைவாக தேசிய நினைவகத்தை அமைப்பதற்காக 1951 ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவகச் சட்டம் ஏற்படுத்தப்பட்டது.
  • 1951 ஆம் ஆண்டு சட்டமானது தேசிய நினைவகத்தை நிர்வகிப்பதற்காக அறக்கட்டளையை ஏற்படுத்தவும் வழி செய்துள்ளது. அந்த அறக்கட்டளையானது பின்வருபவர்களை உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும்.
    • தலைவர் என்ற பதவியில் பிரதமர்,
    • இந்திய தேசியக் காங்கிரஸின் தலைவர்
    • மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர்
    • மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர்
    • பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர் மற்றும் ஆளுநர்
    • மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட மூன்று சிறந்த ஆளுகைகள்
2018 திருத்தம்
  • 2018 ஆம் ஆண்டு திருத்த மசோதாவானது அறக்கட்டளையில் உறுப்பினராக இருக்கும் இந்திய தேசியக் காங்கிரஸின் தலைவரை நீக்குகிறது.
  • மேலும் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் யாரும் இல்லாத பொழுது மக்களவையில் மிகப்பெரிய எதிர்க்கட்சியின் தலைவரே அறக்கட்டளையில் உறுப்பினராக இருப்பார் என்றும் தெளிவுபடுத்துகிறது.
  • 1951 ஆம் ஆண்டு சட்டத்தின்படி மத்திய அரசினால் நியமிக்கப்படும் புகழ்பெற்ற 3 நபர்கள் 5 ஆண்டுகள் பதவிக் காலத்தைக் கொண்டிருப்பர். மேலும் அவர்கள் மறுமுறையும் அப்பதவிக்கு நியமிக்கப்படுவதற்குத் தகுதியுடையவர்கள் என்று அச்சட்டம் கூறுகிறது.
  • மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட 3 உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவடையும் முன்னரே எந்தவொரு காரணமும் இல்லாமல் அவர்களை மத்திய அரசு நீக்குவதற்கான ஒரு புதிய பிரிவை 2018 ஆம் ஆண்டு மசோதா இணைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்