"வெளிப்படையான வரிவிதிப்பு - நேர்மையானவருக்கு மதிப்பளித்தல்" என்பதற்கான ஒரு தளத்தைப் பிரதமர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.
இது நேரடி வரிச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக முகமற்ற மதிப்பீடு (faceless assessment), முறையீடு மற்றும் வரி செலுத்துவோரின் சாசனத்தை வழங்குகிறது.
இந்தத் தளமானது வரி இணக்கத்தை எளிதாக்குவதும், பணத்தைத் திரும்பப் பெறுவதை விரைவாக்குவதையும், நேர்மையாக வரி செலுத்துவோருக்கு பயனளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.