TNPSC Thervupettagam

தத்தெடுக்கும் தாய்மார்களுக்கான மகப்பேறு விடுப்பு

May 18 , 2026 14 days 100 0
  • ஹம்சானந்தினி நந்தூரி எதிர் இந்திய ஒன்றியம் வழக்கில், குழந்தையைத் தத்தெடுக்கும் தாய்மார்களுக்கான மகப்பேறு விடுப்பு பலன்களை இந்திய உச்ச நீதிமன்றம் விரிவுபடுத்தியுள்ளது.
  • தத்தெடுக்கப்பட்ட குழந்தைக்கு மூன்று மாதங்களுக்கும் குறைவாக இருந்தால் மட்டுமே மகப்பேறு விடுப்பு அனுமதிக்கப்படும் என்ற சமூகப் பாதுகாப்பு குறியீடு, 2020 இன் பிரிவு 60(4)-ஐ நீதிமன்றம் ரத்து செய்தது.
  • தத்தெடுக்கும் தாய்மார்கள், தத்தெடுக்கும் போது குழந்தையின் வயது எதுவாக இருந்தாலும், தற்போது 12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு பெற தகுதியுடையவர்கள் ஆவர்.
  • இந்த வரம்பு அரசியலமைப்பின் சரத்து 14 (சமத்துவ உரிமை) மற்றும் சரத்து 21 (வாழ்வு மற்றும் கண்ணியத்திற்கான உரிமை) ஆகியவற்றை மீறுவதாக அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
  • சமூக பாதுகாப்பு குறியீடு, 2020 என்பது சமூக பாதுகாப்பு, மகப்பேறு பலன்கள், வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடை தொடர்பான சட்டங்களை ஒருங்கிணைக்கும் நான்கு தொழிலாளர் குறியீடுகளில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்