TNPSC Thervupettagam

தமிழ்நாடு நகர்ப்புறப் பசுமையாக்கல் கொள்கை 2026

February 9 , 2026 8 days 117 0
  • தமிழ்நாடு அரசானது பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் தமிழ்நாடு நகர்ப்புற பசுமையாக்கல் கொள்கை 2026-ஐ வெளியிட்டது.
  • நகர்ப்புறப் பசுமைப் பரப்பை அதிகரிப்பதன் மூலம், தட்பவெப்பநிலையைத் தாங்கக்கூடிய, நீடித்த மற்றும் வாழத்தகுந்த நகரங்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
  • மரங்கள், நகர்ப்புறக் காடுகள், பூங்காக்கள், ஈரநிலங்கள் மற்றும் நீல-பச்சை உள்கட்டமைப்புகளை நகரத் திட்டமிடலில் ஒருங்கிணைப்பதில் இந்தக் கொள்கை கவனம் செலுத்துகிறது.
  • நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், நகர்ப்புறப் பகுதிகளில் குறைந்தபட்சம் 15% நிலப்பரப்பை பசுமையான பரப்பாக பராமரிக்க வேண்டும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • பசுமைத் தமிழ்நாடு இயக்கமானது, மாநிலத்தில் காடுகள் மற்றும் மரங்களின் பரப்பை 33% ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்