தமிழ்நாட்டில் குறிப்பாக அகத்தியமலைப் பகுதியில் வன உரிமைகள் தொடர்பான கோரிக்கைகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி (CJI) பூஷன் ஆர். கவாயை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.
இக்குழுவில் மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழு அதிகாரி மற்றும் தமிழ்நாட்டின் முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
எஞ்சியுள்ள கிராம சபைகளை 30 நாட்களுக்குள் மாநில அரசு அமைத்து, உரிமைகோரல் செயல்முறையை ஐந்து மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.
வன உரிமைகள் சட்டம் (FRA), 2006 இன் கீழ், தகுதியான வன உரிமைக் கோரிக்கைகளை அடையாளம் கண்டு பரிந்துரைக்கும் செயல்முறையை கிராம சபைகள் தொடங்குகின்றன.
பிற பாரம்பரிய வனவாழ் மக்கள் (OTFD) தாங்கள் 75 ஆண்டுகள் காடுகளில் வசித்ததையும், வாழ்வாதாரத்திற்காகக் காடுகளைச் சார்ந்திருப்பதையும் நிரூபிக்க வேண்டும்.