கடந்த நான்கு ஆண்டுகளில், தேசியத் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கௌரவிப்பதற்காக தமிழக அரசானது 63 சிலைகள் மற்றும் 11 நினைவு மண்டபங்களை நிறுவியுள்ளது.
நாட்டின் சுதந்திரத்திற்கும் தமிழ் மொழிக்கும் பங்களித்தவர்களின் ஒரு நினைவைப் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும் என்பதோடு இது எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு உத்வேகமாக செயல்படுகிறது.
திருவள்ளுவர் சிலை திறக்கப் பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதியன்று சிலைக்கு அருகில் உள்ள ‘Wisdom Dome’ என்ற பேரறிவு அரங்கத்தினை முதல்வர் திறந்து வைத்தார்.
மகாத்மா காந்தி, B.R. அம்பேத்கர், தமிழ்க் கவிஞர் பாரதியார், முன்னாள் முதல்வர் K.காமராஜ், முன்னாள் குடியரசுத் தலைவர் A.P.J. அப்துல் கலாம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, பாடகர் T.M. சௌந்தர ராஜன், திமுக தலைவர் K.அன்பழகன் ஆகியோரின் சிலைகள் திறக்கப்பட்டுள்ளன.
வீரன் சுந்தரலிங்கம், குயிலி, வ.உ.சிதம்பரம் ஆகியோருக்கும், இலக்கியச் அடையாள நபர்களான மயூரம் வேதநாயகம் பிள்ளை மற்றும் பாரதிதாசன் ஆகியோருக்கும் மற்ற நினைவுச் சின்னங்களும் சிலைகளும் திறக்கப்பட்டுள்ளன.