இந்திய அரசானது, தார்த்தி ஆபா ஜன்பாகிதாரி அபியான் எனும் ஒரு திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
இந்தப் பிரச்சாரம் ஆனது, பழங்குடியினர் அதிகம் காணப்படும் 549 மாவட்டங்களிலும், சுமார் 100,000+ கிராமங்கள் மற்றும் வாழ்விடங்களை உள்ளடக்கிய எளிதில் பாதிக்கப் படக் கூடிய பழங்குடியினக் குழுக்கள் (PVTG) அதிகம் வாழும் 207 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.
இது ஜன்ஜாதிய கௌரவ் வர்ஷ் என்ற திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட மிகப்பெரியப் பழங்குடியின அதிகாரமளிப்புப் பிரச்சாரம் ஆகும்.
இது ஆதார் அட்டை சேர்க்கைகள் மற்றும் புதுப்பிப்புகள், ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை வழங்கல், ஜன் தன் வங்கிக் கணக்குகளைத் தொடங்குதல் உள்ளிட்ட சில முக்கியமான உரிமைகள் மற்றும் அரசு சேவைகளுக்கான அணுகலை வழங்கும்.