TNPSC Thervupettagam

திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026

February 9 , 2026 8 days 65 0
  • சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC), சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986-இன் கீழ், 2016 ஆம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்குப் பதிலாக, 2026 ஆம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை விதிகளை அறிவித்துள்ளது.
  • இந்த விதிகள் நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் முழுவதும் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
  • இது கழிவுகளை அதன் மூலத்திலேயே பின்வரும் நான்கு வகைகளாகப் பிரிப்பதை கட்டாயமாக்குகின்றன. அவை — ஈரக் கழிவுகள், உலர் கழிவுகள், சுகாதாரக் கழிவுகள் மற்றும் சிறப்புப் பராமரிப்பு தேவைப்படும் கழிவுகள்.
  • இந்த விதிகள் 'மாசுபடுத்துபவரே செலவை ஏற்றல்' என்ற கொள்கையைப் பின்பற்றுகின்றன என்ற நிலையில் இதற்கான அபராதங்கள் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களால் செயல் படுத்தப் படும்.
  • தினமும் 100 கிலோ அல்லது அதற்கு மேற்பட்ட கழிவுகளை உருவாக்கும் நிறுவனங்கள், அல்லது பெரிய கட்டிடங்கள் மற்றும் நிறுவனங்கள் பெருமளவு கழிவு உருவாக்குபவர்கள் (BWG) என அழைக்கப்படுகின்றனர்.
  • ஒரு மையப்படுத்தப்பட்ட இணையவழி வலைதளம் ஆனது கழிவு உருவாக்கம், சேகரிப்பு மற்றும் அகற்றல் ஆகியவற்றை கண்காணிக்கும்.
  • குப்பைக் கிடங்குகளானது மறு சுழற்சி செய்ய முடியாத மற்றும் வினையுறா கழிவுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப் படும் என்ற நிலையில் மேலும் பழைய குப்பைக் கொட்டும் இடங்களிலிருந்து உயிரி முறையில் கழிவுகளைப் பிரித்தெடுப்பது என்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்