TNPSC Thervupettagam

திருநர்கள் மற்றும் ஊடு பாலினத்தவர்களுக்கான கல்வித் திட்டங்கள்

July 3 , 2025 10 hrs 0 min 43 0
  • தமிழ்நாடு அரசானது திருநர்கள் மற்றும் ஊடு பாலினத்தவர்களை உள்ளடக்கும் வகையில் பின்வரும் இரண்டு கல்வி ஆதரவுத் திட்டங்களை அந்தப் பிரிவினருக்கும் விரிவுபடுத்தியுள்ளது.
    • புதுமைப் பெண் திட்டம்
    • தமிழ்ப் புதல்வன் திட்டம்
  • இரண்டு திட்டங்களும் அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் (6 முதல் 12 ஆம் வகுப்பு) உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கு மாதத்திற்கு 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்குகின்றன.
  • தற்போது, ​​திருநர்கள் மற்றும் ஊடு பாலினத்தவர் ஆகிய இரு பிரிவினரும் அந்த இரண்டு திட்டங்களின் கீழ் பலன் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.
  • இத்திட்டங்களின் கீழ் பயன் பெற திருநர்கள் மற்றும் ஊடுபாலினத்தவர்கள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டிய அவசியமில்லை என்ற தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
  • அவர்கள் தமிழ்நாடு திருநர்கள் நல வாரியத்திடமிருந்து பெறப்பட்ட செல்லுபடியாகும் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.
  • உயர்கல்விக்காக மிகவும் சமமான ஒரு அணுகலை ஊக்குவிப்பதையும், விளிம்புநிலை சமூகங்களை ஆதரிப்பதையும் இந்த நடவடிக்கை நோக்கமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்