TNPSC Thervupettagam

தேசிய சுகாதார கணக்கு விவரங்கள் 2022-23

June 1 , 2026 13 days 136 0
  • மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகமானது, 2022-23 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் தேசிய சுகாதார கணக்குகள் (NHA) மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது.
  • அரசின் சுகாதாரச் செலவினம் ₹1.30 லட்சம் கோடியிலிருந்து (2013-14) ₹3.85 லட்சம் கோடியாக (2022-23) அதிகரித்துள்ளது.
  • அதே காலகட்டத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) அரசின் சுகாதாரச் செலவினப் பங்கு 1.15%-லிருந்து 1.43%-ஆக உயர்ந்துள்ளது.
  • தனி நபர் அரசு சுகாதாரச் செலவினம் ₹1,042-லிருந்து ₹2,786-ஆக அதிகரித்துள்ளது.
  • மொத்த சுகாதாரச் செலவினத்தில், பொதுமக்கள் தங்களின் சொந்தப் பணத்திலிருந்து மேற்கொள்ளும் மருத்துவச் செலவு 64.2%-லிருந்து 43.4%-ஆகக் குறைந்துள்ளது.
  • ஆரம்ப சுகாதாரப் பராமரிப்புக்கான அரசின் செலவினம் 2013-14 மற்றும் 2022-23 ஆம் ஆண்டிற்கு இடையில் ₹0.5 லட்சம் கோடியிலிருந்து ₹1.4 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்