TNPSC Thervupettagam

தேசிய நீர் விருதுகள் 2019

November 11 , 2020 1699 days 674 0
  • இந்த விருதுகள் மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தால் வழங்கப் பட்டன.
  • தமிழகமானது ‘சிறந்த மாநிலம்’ என்ற பிரிவின் கீழ் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
  • தமிழ்நாட்டைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகியவை அப்பிரிவின் கீழ் சிறந்த மாநிலங்களாக இடம் பிடித்துள்ளன.
  • வேலூர் மற்றும் கருர் மாவட்டங்களுக்கு முறையே முதல் மற்றும் இரண்டாவது இடங்கள் ‘நதிக்குப் புத்துயிர் அளித்தல்’ என்ற ஒரு துணைப் பிரிவின் கீழ் வழங்கப் பட்டுள்ளன.
  • பெரம்பலூர் மாவட்டமானது ‘நீர்ப் பாதுகாப்பு’ என்ற பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • தெற்கிற்கான ‘நீர்ப் பாதுகாப்பு’ என்ற பிரிவின் கீழ் தூத்துக்குடியைச் சேர்ந்த சாஸ்தவிநாதூர் கிராமப் பஞ்சாயத்தானது முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
  • ‘சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு’ என்ற பிரிவில் முதல் இடம் மதுரை மாநகராட்சிக்கு வழங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்