தொலைத்தொடர்பு சார் புத்தொழில் நிறுவனங்களுக்கான சமர்த் திட்டம்
June 20 , 2025 12 days 49 0
தகவல் தொடர்பு மேம்பாட்டு மையம் (C-DOT) ஆனது 'சமர்த்' திட்டத்தை அறிமுகப் படுத்தியது.
இது தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கான ஓர் அதிநவீன தொழிற்காப்புத் திட்டமாகும்.
முதல் கட்டத்தில் 18 புத்தொழில் நிறுவனங்கள் போட்டிச் செயல்முறை மூலம் முதல் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்தப் புத்தொழில் நிறுவனங்களுக்கு என நிதி மானியம், முழுமையான வசதிகள் பொருத்தப் பட்ட அலுவலக இடம் மற்றும் டெல்லி மற்றும் பெங்களூரு வளாகங்களில் C-DOT மையத்தின் பல்வேறு ஆய்வக வசதிகளுக்கான அணுகல் ஆகியவை வழங்கப் படுகின்றன.
"சமர்த்" தொழிற்காப்புத் திட்டம் ஆனது தொலைத்தொடர்புச் செயலிகள், இணைய வெளிப் பாதுகாப்பு, 5G/6G தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, இணைய உலகம் (IoT) மற்றும் குவாண்டம் தொழில்நுட்பங்களில் செயலாற்றும் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கு ஒரு பெரும் முழுமையான ஆதரவை வழங்குகிறது.