நாசாவின் விண்மீன் மண்டல ஆய்வு மற்றும் முடுக்கக் கலமானது (IMAP) ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ஏவு வாகனம் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
புவி மற்றும் விண்வெளி வானிலையில் சூரியனின் தாக்கத்தைப் பற்றிப் புரிந்து கொள்வதற்காக IMAP கலமானது அயனிச் செறிவு மண்டலம், சூரியக் காற்று மற்றும் விண்மீன் மண்டலங்களுக்கு இடையேயான துகள்களை ஆய்வு செய்யும்.
சூரிய மற்றும் விண்மீன் மண்டலங்களுக்கு இடையேயான செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிப்பதற்காக வேண்டி இந்த விண்கலம் ஆனது முதல் லக்ராஞ்ச் புள்ளியிலிருந்து (L1) செயல்படும்.
விண்வெளி வானிலை முன்னறிவிப்பை வழங்குவதற்கும், செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளி வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் இது சுமார் 10 கருவிகளைக் கொண்டுள்ளது.