இந்தியாவில் நிலக்கரி இறக்குமதியானது 2019 ஆம் ஆண்டில் 12.6% என்ற அளவிற்கு உயர்ந்து கிட்டத்தட்ட 200 மில்லியன் டன்னாக உள்ளது.
இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியானது முக்கியமாக மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப் படுகின்றது.
இந்தியாவின் மொத்த நிலக்கரி இறக்குமதியில் கிட்டத்தட்ட 60% இறக்குமதியானது இந்தோனேசியாவிலிருந்து வருகின்றது.
இருப்பினும், எஃகு உற்பத்தியில் முக்கியமாக பயன்படுத்தப்படும் நிலக்கரியின் (coking coal) இறக்குமதியானது ஓரளவு சரிந்துள்ளது.
உலகில் நிலக்கரி உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. நிலக்கரி உற்பத்தியில் சீனா முதல் இடத்தில் உள்ளது.
சீனாவும் இந்தியாவும் உலகின் மிகப்பெரிய நிலக்கரி இறக்குமதியாளர் நாடுகளாக விளங்குகின்றன.
உலகின் அதிக அளவு நிலக்கரியை நுகரும் இரண்டு நாடுகள் சீனா மற்றும் இந்தியா (உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள்) ஆகும்.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இந்தோனேசியா போன்ற நிலக்கரியை உற்பத்தி செய்யும் நாடுகள் தங்களது உள்நாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்த பின்னர் ஏற்றுமதி செய்வதற்கான அதிக திறனைக் கொண்டுள்ளன.