பசுமை இல்ல வாயு உமிழ்வு தீவிரத்திற்கான இலக்கு விதிகள், 2025
January 24 , 2026 3 days 47 0
2025 ஆம் ஆண்டு பசுமை இல்ல வாயு உமிழ்வு தீவிர (GEI) இலக்கு (திருத்தம்) விதிகளின் கீழ் கட்டாய உமிழ்வு-தீவிரக் குறைப்பு இலக்குகளின் இரண்டாவது சுற்று குறித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
தொழில்துறைப் பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைப்பதற்காக, 1986 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் இந்த விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
அவை அக்டோபர் 09, 2025 அன்று அமலுக்கு வந்தன என்பதோடு மேலும் அவை இந்தியாவின் கார்பன் மதிப்பு வர்த்தகத் திட்டத்தை (CCTS) ஆதரிக்கின்றன.
பெட்ரோலியச் சுத்திகரிப்பு நிலையங்கள், பெட்ரோ வேதியியல், ஜவுளி மற்றும் இரண்டாம் நிலை அலுமினியத் துறைகள் ஆகியவை இரண்டாவது சுற்றில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த இலக்குகள் ஒரு அலகு உற்பத்திக்கு ஒரு டன் கார்பன் டை ஆக்சைடுக்குச் சமமான (tCO₂e) என அளவிடப்படும் உமிழ்வுத் தீவிரத்தை அடிப்படையாகக் கொண்டவை.
எரிசக்தி திறன் வாரியம் (BEE) கார்பன் மதிப்புகளை வழங்குகிறது என்பதோடுஅதே நேரத்தில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) விதிகளின் இணக்கத்தை அமல்படுத்துகிறது.
இந்த விதிகள் 2023–24 ஆம் அடிப்படை ஆண்டுடன் ஒப்பிடும் போது 2026–27 ஆம் ஆண்டளவில் உமிழ்வு தீவிரத்தை சுமார் 3–7% குறைப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளன.